Home » ஆய்வுகளும் அல்வாக்களும்
விண்வெளி

ஆய்வுகளும் அல்வாக்களும்

சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா. இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு ‘ஜெயஹிந்த்’, ‘ஜெய் பாரத்’ என்று முழங்கினார் சுபான்ஷு சுக்லா. நான்கு பேர் கொண்ட குழுவில் ஒருவராகச் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சுக்லாவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியக் கொடியை நிறுவியதற்கு சுக்லாவுக்கு வாழ்த்துக் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இக்குழு பயணித்துள்ளது. இந்தத் திட்டம் பல சோதனைகளையும் தடைகளையும் தாண்டி இலக்கை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதமே செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, விண்கலப் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, விண்கலத்தை ஏவுவதில் சிக்கல் எனப் பல்வேறு பிரச்சனைகளால் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ள இந்தக் குழுவினர், இரண்டு வாரங்கள் அறுபது சோதனைகளை விண்ணில் மேற்கொண்ட பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!