இந்தோனேசியாவில் உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் காலம் கிட்டத்தட்ட 67,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணித்திருக்கிறார்கள். பழங்காலக் குகை மற்றும் பாறை ஓவியங்களின் வயதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? இவற்றின் மூலம் நம் நவீன மனம் அறிந்து கொள்ளக்கூடிய செய்திகள் என்னென்ன?
குகை ஓவியங்கள் மனித நாகரிகத்தின் ஆரம்பகாலக் கலை வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர்கள் குகைச் சுவர்களில் வரைந்த இந்த ஓவியங்கள், அவர்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சிந்தனைத் திறன் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றன. இவை வெறும் கலைப் படைப்புகள் மட்டுமல்ல; மனித மனத்தின் பரிணாம வளர்ச்சியின் சாட்சிகளாகவும் திகழ்கின்றன.
குகை ஓவியங்களில் பெரும்பாலானவை, விலங்குகளின் வடிவங்களே. ஆனால் ஒவ்வொன்றும் அதன் இயல்பான வடிவத்தை விட மிகப் பிரம்மாண்டமாக வரையப்பட்டிருக்கின்றன. காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் எனப் பல்வேறு மிருக இனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக மனிதக் கைகளின் தடங்கள் நிறைய காணப்படுகின்றன.















Add Comment