ஒருவர் தனது எழுபதாவது வயதில் இன்னும் புரொஃபஷனல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐம்பது ஓவரும் மைதானத்தில் நின்று விக்கெட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா?
தனிமனித விளையாட்டுகளில் கூட முதிர்ந்த வயதிலும் விளையாடி சாதனை படைத்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. மரியா மாசெங்கா 90 வயதில் ஓட்டப்பந்தயத்திலும், ராபர்ட் மர்சென்த் 109 வயதில் சைக்கிள் பந்தயத்திலும், எட் விட்லாக் 86 வயதில் மாரத்தான் ஓடியும், எர்நெஸ்டின் ஷெப்பர்ட் 84 வயதில் ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டும், யுசிரோ மூரா 88 வயதில் எவரெஸ்ட் உள்ளிட்ட மலைச்சிகரங்களில் ஏறியும் சாதனை படைத்துள்ளனர்.
மார்டினா நவரத்திலோவா 59 வயதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.














Add Comment