இந்தக் கோடைக்கு சென்னையின் சில பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோடை முகாம்கள் தொடர்பான தகவல்களை மெட்ராஸ் பேப்பருக்காகச் சேகரித்திருந்தோம். தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் என்று வாரத்தில் ஐந்து நாட்கள், அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை இவை நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு ஆயிரத்து எண்ணூறு முதல் பதினையாயிரம் வரை கட்டணம் அளவிடப்படுகின்றது. பயிற்சி வகுப்பு, நடைபெறும் இடம், நடத்தும் நிறுவனத்தின் புகழ் என்பவற்றைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் வேறுபடும்..
கோடை முகாம்கள் என்று சொன்னாலே ஓவியம் வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கக் கற்றுத் தரும் வகுப்புகள் தான் உலகப் பிரசித்தம். சென்னையிலும் இவற்றுக்கு ஒரு போதும் பஞ்சம் இல்லை என்பதால் இவ்வருடமும் நகரம் முழுவதும் பரவலாக இவை நடைபெறுகின்றன. அவரவர் வயதுக்கு ஏற்றாற்போல இவை வடிவமைக்கப்படுவதால் பெற்றோரும் குழந்தைகளும் இணைந்து கலந்து கொள்ளும் வசதி கொண்ட வகுப்புகளும் சில இருக்கின்றன.
Add Comment