இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடியது. அதில் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அவ்வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் 1962-ஆம் ஆண்டு சீனா ஆக்கிரமித்த பகுதியை அக்சாய் சின் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு மாண்டரின் மற்றும் திபெத்திய மொழிகளில் பெயரிட்டுக் குறித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத் தலைநகர் இட்டாநகர் அருகில் உள்ள ஒரு ஊர் வரை பெயரை மாற்றிக் குறித்துள்ளது.
Add Comment