பிறப்பும் இறப்பும் மட்டும் மனிதனின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால்தான் கடவுள் இன்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அவரது படைத்தல் காத்தல் கடமை சார்ந்த நம்பிக்கைகளும். அழித்தல்? ம்ஹும். அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து அந்தப் பணியில் இருந்து கடவுளை அகற்றிவிட்டோம்.
ராபர்ட் ஜே ஓபன்ஹெய்மர், அணு குண்டைக் கண்டுபிடித்தவுடன், தன்னையே கிருஷ்ண பகவான் போல உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். “நான் இறப்பாகவே மாறிவிட்டேன், உலகத்தை அழிப்பவன் நான். “
இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வை , இயல்பான வழக்கு விசாரணை நடையில் சொன்ன ஓபன்ஹெய்மர் திரைப்படம் , இந்த ஆண்டு ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறது. ஒரு வகையில் இது எதிர்பார்க்கப்பட்டதே. பதின்மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, ஏழில் வெற்றி. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என்ற மூன்று முக்கியப் பிரிவுகளும் அடங்கும்.
Add Comment