Home » சிக்கல் சிங்காரவேலர்களும் சிக்காமல் தப்பிக்கும் வழிகளும்
நுட்பம்

சிக்கல் சிங்காரவேலர்களும் சிக்காமல் தப்பிக்கும் வழிகளும்

உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், வாசல் தாழ்ப்பாளில் பூட்டொன்று தொங்குகிறது. அல்லது அதைவிட மோசமாக வீடே இடிந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எனில், அது எத்தனை பெரிய அதிர்ச்சி! இதனால் ஏற்படும் பண இழப்பு ஒருபுறமிருக்கட்டும், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பார்த்துப் பார்த்து சேகரித்துவைத்த உங்கள் நினைவுகள், உங்களின் தனிப்பட்ட பொக்கிஷங்களெல்லாம் என்னாவது?

இதுபோன்ற விஷயம் டிஜிட்டல் உலகில் நடக்கும் என்றால் நம்பக் கடினமாக இருக்கும். நம் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வரை, வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் படங்கள், மருத்துவக் காப்பீடு என்று எல்லா முக்கியத் தகவல்களையும் டிஜிட்டலாக கணினியிலோ, செல்பேசியிலோதான் இன்று சேமித்து வைத்திருக்கிறோம். கூடுதலாக நம் வங்கியின் இணையக் கணக்குக்கான கடவுச்சொற்களையும்கூட டிஜிட்டலாகப் பதிவுசெய்து வைத்திருப்போம். இவையெல்லாமே மிக முக்கியம், அதனால் செல்பேசி தொலைந்துவிட்டால் அல்லது தவறுதலாக அழிந்துபட்டால் என்னாவது என்று கோப்புகளின் பாதுகாப்புக் கருதி, அவற்றை மேகக் கணிமையிலும் சேமித்து வைக்கிறோம். ஏதோவொரு காரணத்தினால் உங்களின் மேகக் கணிமைக் கணக்கு… அது கூகுளாக இருக்கட்டும், மைக்ரோசாப்டாக இருக்கட்டும், ஜோஹோவாக இருக்கட்டும்…. திடீரென்று அது வேலை செய்யவில்லை என்றால் உங்கள் வாழ்வு எவ்வளவு கடினமாகிவிடும்.? யோசியுங்கள்.

சிலவற்றை இழந்தால் மீட்பதற்கு வழியுண்டு. உதாரணமாக, வங்கியின் கிளைக்குச் சென்று புதிய கடவுச்சொல்லை வாங்கி வங்கிக் கணக்கை இயக்கலாம். மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மற்றும் மருந்துச் சீட்டுகளை மருத்துவமனைக்குச் சென்று கெஞ்சி வாங்கிவிடலாம். ஆனால் இப்படி எல்லா விஷயங்களுக்கும் ஒவ்வோரிடமாகச் சென்று மீட்டெடுக்க எத்தனை காலம் ஆகுமென்று எண்ணிப் பாருங்கள். இதுமாதிரி விஷயங்களை உங்களைத் தவிர வேறொரு நிறுவனத்திடம், அரசாங்கத் துறையிடம் விவரங்கள் இருப்பதால் திரும்பப் பெற முடிகிறது. ஆனால்…

உங்களின் தனிப்பட்ட தரவுகள், அது நீங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இரவுபகலாக எழுதிய முனைவர் (பி.எச்டி.) ஆய்வுக்கான கட்டுரையாக இருக்கலாம், உங்கள் குழந்தை பிறந்த நிமிடத்திலிருந்து இன்றுவரை அவளின்/அவனின் வளர்ச்சியின் பதிவுப் படங்களாக இருக்கலாம். மறைந்த உங்கள் தந்தை உங்களுக்குக் கடைசியாக அனுப்பிய குரல்வழி வாட்ஸ்-ஆப் செய்தியாக இருக்கலாம். நீங்கள் தொழில் செய்பவர் எனில், பல ஆண்டுகளாக நீங்கள் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த உங்களின் வாடிக்கையாளர் தொடர்பு எண்கள், மின்-அஞ்சல் என்று எதுவுமே இனி உங்களுக்குக் கிடைக்காது எனில் என்ன செய்வீர்கள்? வாட்ஸ்-ஆப் செய்திகளின் சேமிப்பும் கூகுள் டிரைவில்தான் நடக்கிறது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அது எப்படி நம் கணக்கைத் திடீர் என்று முடக்குவார்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!