CMS-03 என்ற தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி இது ஏவப்பட்டது. கடற்படைக்கான பிரத்தியேகத் தகவல்தொடர்புச் சாதனங்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், கடல் ரோந்து விமானங்கள், படைத்தளங்களுக்கு இடையேயான தகவல்தொடர்பை இது மேம்படுத்தும்.
இந்தியக் கடற்படை 2013இல் ஏவப்பட்ட GSAT-07 செயற்கைக்கோளையே இதுவரை பயன்படுத்தி வந்தது. அதன் ஆயுள்காலம் முடிவடைய இருப்பதால் அதற்கு மாற்றாகவும், இன்னும் மேம்படுத்தப்பட்ட திறனுடனும் CMS-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சி, செல்ஃபோன் சேவை, பேரிடர் கால மீட்புப்பணிகள் போன்றவற்றுக்கான முக்கியச் சாதனங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தச் செயற்கைக்கோள், புவியின் நீள்வட்டப்பாதை வரை LMV3-M5 ராக்கெட் மூலம் செலுத்தப்படும். பிறகு இதிலிருக்கும் என்ஜின்கள் மூலம் சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு செல்லப்பட்டு பூமியைச் சுற்றிவரும். இந்தச் செயற்கைக்கோள் அடுத்த பதினைந்து வருடங்களுக்குப் பயன்பாட்டில் இருக்குமென்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.















Add Comment