Home » ஆளப்போகும் தாத்தா யார்?
உலகம்

ஆளப்போகும் தாத்தா யார்?

ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் உடற்பயிற்சி நிலையங்கள் பொங்கி வழியும் எல்லா இயந்திரங்களிலும் உற்சாகமாக யாரேனும் ஓடிக்கொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். நாள் முழுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தக் காத்திருப்போர் பட்டியலும் அனுமார் வால் போல நீண்டிருக்கும். அடுத்துவரும் சில நாட்களும் வாரங்களும் கூட அப்படித்தான் இருக்கும். ஆனால் பிறகு மெல்ல மெல்ல அவை ஈயாடத்தொடங்கும். மிகவும் தீவிரமான ஒருசிலர் மட்டுமே தொடர்ந்து வருவார்கள். அமெரிக்கத் தேர்தலும் அப்படித்தான்.

ஆளும் கட்சியில் பொதுவாக, பதவியில் இருக்கும் அதிபரே வேட்பாளராகத் தொடர்வதுதான் நடக்கும். இல்லாவிடில் அவர் மீதே கட்சிக்கு நம்பிக்கையில்லாத தோற்றம் வரும் என்பதால் மாற்று வேட்பாளர்களை அறிவிப்பதில்லை. ஆனால் எதிர்க் கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள பலர் போட்டியில் இறங்கி விவாத மேடையைச் சந்தித்து மெல்ல மெல்ல நிதி தீர்ந்ததும் போட்டியில் இருந்து விலகி விடுவார்கள்.

ஐயோவா முதன்மையில் இந்தப் பட்டியல் இன்னும் குறுகி விடும். அதன் பின் நியுஹாம்ப்ஷர், கொலராடோ போன்ற முதன்மைகளில் இன்னும் குறுகும். இவை யாவும் முடிந்தபின் கிட்டத்தட்ட 16 மாநிலங்கள் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குப் பிடித்தமான மிச்சம் களத்தில் இருக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் செவ்வாய்க்கிழமைதான் சூப்பர் செவ்வாய்க்கிழமையாக முக்கியத்துவம் பெறுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!