மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபத்து நான்காவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதியிலிருந்து ஆறாம் தேதிவரை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், தில்லி போன்ற இடங்களிலிருந்து பிற அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடி ஏற்றித் தொடங்கி வைத்தார். செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. தமுக்கம் மைதானம் முழுதும் காக்கி பேண்ட், சிவப்பு சட்டை அணிந்த தொண்டர்களால் நிரம்பியிருந்தது. தலைவர்களை வரவேற்பது, தொண்டர்களை ஒழுங்குபடுத்துவது எனப் பரபரப்பாகச் செயல்பட்டனர் தொண்டர்கள். போக்குவரத்து, உணவு, அமருமிடம் எனத் தனித்தனிக் கவுண்டர்கள் அமைக்கபட்டு வெகு ஒழுங்காக மாநாடு நடைபெற்றது. கட்சி தொடர்பாக நடைபெற்ற மாலை நேரக் கூட்டத்திற்கு வெளியாள்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இது போன்ற தேசிய மாநாடு மதுரையில் 1957, 1972 இல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிலர் இந்த மாநாட்டிலும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டின்போது கூரை வீடுகளிலும், கூடாரங்களிலும் மேடைக்குப் பின்புறமும் படுத்து உறங்கியதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
Add Comment