வீட்டுத் தோட்டம் தெரியும். சமூகத் தோட்டம் தெரியுமா? அமெரிக்காவில் இது மிகவும் பிரபலம்.
சமூகத் தோட்டக்கலை என்பது பொதுவாக பலத் தனித்தனி நிலங்களில் பயிரிடுவதில் இருந்து ஒரு பொதுவான இடத்தில் கூட்டுச் சாகுபடி செய்வது வரையிலான செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் சமூகத் தோட்டக்கலையின் தோற்றம் 1800களின் பிற்பகுதியில் ஆரம்பமானது. கைவிடப்பட்ட தோட்டங்கள், நகர்ப்புற வேலையில்லாதவர்களுக்கு உணவை வளர்ப்பதற்காகத் தரப்பட்டன. “பல்வேறு மக்கள்தொகையைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் தோட்டக்கலைக்கான இடத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் பராமரிக்கவும் ஒன்று கூடும் பொதுவான இடங்கள்” என சிங்கப்பூர் தேசியப் பூங்கா வாரியம், சமூகத் தோட்டங்களைக் குறிக்கிறது.
Add Comment