சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் கேரளாவிலும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது மத்திய அரசு. அதே நேரம், தமிழக சுகாதாரத் துறை, தமிழகத்தில் புதிய வகைக் கொரோனா தொற்று இல்லை எனக் கூறியுள்ளது.
மீண்டும் கொரோனா பரவுகிறது என்ற செய்தி பலருக்கும் பீதியை ஏற்படுத்தியிருப்பது இயல்புதான். அந்த அளவுக்கு மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன கடந்தகாலக் கொரோனாக்கள். அக்காலங்களில் உணவுக்கும் வாழ்வாதாரத்துக்கும் திண்டாடிய மக்கள் அநேகம் பேர். மீண்டும் அப்படியொரு நிலை வந்துவிடக்கூடாது என்பதே அவர்களின் வேண்டுதலாக உள்ளது.
ஏப்ரல் 20 முதல் மே 3 வரையிலான காலத்தில் சிங்கப்பூரில் 25,300 பேருக்குக் கொரொனோ தொற்று ஏற்பட்டிருந்ததாகக் கூறியது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம். சென்ற சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. பல ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதைக் காணமுடிகிறது. இருந்தாலும், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது.














Add Comment