பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தைச் சுற்றி ஓராயிரம் கேள்விகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளப் பங்குச் சந்தையில் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை டப்பா ட்ரேடிங் என்கிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல், முறையாக பதிவுசெய்யப்படாமல் இயங்கும் பங்குப் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் நடக்கும் வியாபாரம் மட்டும் 70,000 கோடி. அதாவது முறையான பங்குச்சந்தையை விட முப்பது சதவிகிதம் மட்டுமே குறைவு.
செபி – இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம். மத்திய அரசின் பங்குச்சந்தை நடவடிக்கைகளைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் மையம். நாம் பங்குகளை வாங்கும் போது, அரசாங்கத்திற்கு வரி செலுத்தவேண்டும். செபி விற்றுமுதல் கட்டணம், ஸ்டாம்ப் கட்டணம், சரக்கு பரிவர்த்தனை வரி, பத்திரப் பரிவர்த்தனை வரி என அனைத்தும் உண்டு. பங்கின் விலையில் சொற்ப அளவில் இருந்தாலும் மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் வந்த லாபத்தில் பெரும்பகுதி அரசுக்கு வரியாகவே போய்விடும்.
சில மாதங்கள் முன்பு வடஇந்திய பங்கு வர்த்தகர் ஒருவர் நான் பணம் போட்டுச் செய்யும் வணிகத்தில் இந்திய அரசு ‘ஸ்லீப்பிங் பார்ட்னராக’ இருக்கிறது என நிதியமைச்சரிடம் சொன்ன செய்தி வைரலானது. வரி அதிகம் என நினைப்பவர்கள் மாற்று வழியைத் தேடுகிறார்கள். சட்டவிரோத வழி. பதிவு செய்யப்படாத தளங்கள்/ புரோக்கர்களின் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறும் கள்ளச் சந்தையில், இதுபோன்ற வரிகள் இல்லை. பங்குகளைப் பற்றிய குறிப்புகளோ, பரிவர்த்தனை விவரங்களோ எந்த அரசாங்க தளத்திலும் பதிவாகாது.
சரி, இந்தக் கள்ளச் சந்தையின் மோடஸ் ஆபரண்டி, அதாவது அவர்கள் செயல்படும் முறை தான் என்ன?
Add Comment