Home » சர்வ நாச பட்டன் (ரஷ்யப் பதிப்பு)
உலகம்

சர்வ நாச பட்டன் (ரஷ்யப் பதிப்பு)

அணு ஆயுதப் பெட்டி என்பது கைக்கு அடக்கமான லேப்டாப் போன்றது. எதிர்த் தாக்குதலை ஏவும் ரகசிய அனுமதிக் குறியீட்டை ரஷ்ய அதிபர் இதில் பதிவு செய்துவிட்டால், அக்கட்டளை ராணுவ தலைமையகத்துக்குச் செல்லும். அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், அவசரகாலத் திட்டப்படி அணுஆயுதத் தளங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். நீர்மூழ்கிகள், டிரக்குகள், குகைகள், ரயில்கள் என எங்கு வேண்டுமானாலும் இந்த ரகசியத் தளங்கள் அமைந்திருக்கும்.

இப்போது ரஷ்யாவை நோக்கி அணுஆயுத ஏவுகணை ஒன்று ஏவப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே நிமிடத்துக்குள் ரஷ்ய செயற்கைக்கோள்கள் அதைக் கண்டுபிடித்து, மாஸ்கோவிலிருக்கும் கட்டுப்பாடு அறைக்குச் செய்தியனுப்பும். செய்தி சரிபார்க்கப்பட்டு ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பப்படும். மறுமுறை உறுதி செய்யப்பட்டு உடனே இது ரஷ்யாவின் ‘செகே’ எனப்படும் மூன்று அணுஆயுதப் பெட்டிகளைச் சென்றடையும். ரஷ்ய அதிபர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவப்படைத் தலைவர் ஆகிய மூவரிடம் இந்தப் பெட்டிகள் இருக்கும். ரஷ்ய ஏவுகணைக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கும் இது குறித்த எச்சரிக்கை சென்றுவிடும்.

இதற்குள் எதிரி ஏவுகணை ஏவப்பட்டு மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கும். அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்டிருந்தால் அணுஆயுதம் ரஷ்யாவை வந்தடையக் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஆகும். ரஷ்ய அதிபர் பிறநாட்டு அதிபர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளும் வசதியும் இந்தப் பெட்டியுடன் இணைந்திருக்கும். அதேநேரத்தில், மற்ற இரண்டு பெட்டிகளை வைத்திருப்பவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மூவரும் ராணுவத்துடன் கலந்துபேசி, தரைத்தள ரேடார்கள் மூலமாகவும் எதிரி ஏவுகணைகளை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். மூவரில் இருவர் சம்மதித்தால் கட்டளை ஏற்றுக்கொள்ளப்படும். இந்நேரம் ரேடார்கள் கண்டறியும் தூரத்தில் அவை ரஷ்யாவுக்கு அருகே வந்திருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!