Home » எடை போடு, எடைக்குப் போடு!
சிறப்புப் பகுதி

எடை போடு, எடைக்குப் போடு!

வாழ்க்கையை எளிமையாக்கும் கலை மினிமலிசம். தேவைக்கு அதிகமாக நம்மிடம் இருக்கும் பொருள்கள், அவசியமின்றி நாம் ஏற்றிருக்கும் பொறுப்புகள், கடமைகள் அனைத்தையும் விடுத்து, நிறைவாக வாழ்வதே மினிமலிசம் என்னும் எளிமைவாதம்.

மூன்று தினங்களுக்கு வெளியூர் செல்ல வேண்டுமென்றாலே குறைந்தது ஆறு முதல் எட்டு செட் துணிகள், மூன்று ஜோடி காலணிகளை எடுத்து வைப்பவர்கள். சிறு சங்கடம் நேர்ந்தாலும் உடனே சுற்றுலா, ஷாப்பிங் செல்பவர்கள். எதற்கும் இருக்கட்டும் என ஒன்றுக்கு இரண்டாகப் பொருள்களை வாங்கி குவிப்பவர்கள் என மாக்ஸிமலிசவாதிகள் இந்த மினிமலிச வாழ்க்கைக்கு மாற வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் தேவையற்றவற்றை நீக்குவதிலிருந்துதான் தொடங்கவேண்டியிருக்கும். அதற்குப் பெயர்தான் டி-க்ளட்டரிங்.

டி-க்ளட்டரிங் எனப்படும் நாம் சேர்த்து வைத்திருக்கும் தேவைக்கு அதிகமானவற்றை நீக்கும் பணியின் முதல் படி, அவற்றைக் கண்டறிவது. அதற்கு விதவிதமான வழிமுறைகளையும் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், நிமிடத்திற்கொரு முறை வந்துபோகும் ரயில்களின் சப்தங்களுக்குப் பழகிப் போயிருப்பார்கள். ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அது அவர்களுக்குத் தொந்தரவாகவே இருக்காது. அதேபோலத்தான் ஒழுங்கற்று இருக்கும் வீடும். நம் அலுவலக அறை, பயன்படுத்தும் வாகனம் என அனைத்துமே இதில் அடங்கும். நாளடைவில் நாம் அதற்குப் பழகிவிடுவதால், அதைத் தனியே நேரம் எடுத்து சுத்தம் செய்வதெல்லாம் கடினமான காரியமாகத் தோன்றலாம். மாறுதலுக்கு அவற்றைத் தினசரி கடமையாக அல்லாமல், விளையாட்டாகச் செய்து பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!