சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரொருவரும் அவருடைய பணியைத் தொடர்ந்து செய்யலாம் என்கிறது சட்டம். அவர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தாலும் சரி. ஆனால் சிறையிலிருந்து கொண்டு ஆட்சி செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. சிறைத்துறையில் முறையான அனுமதி பெற வேண்டியதும் கட்டாயம்.
மதுபானக் கொள்கையில் (Delhi Liquor Policy) ஊழல் எனச் சொல்லி பா.ஜ.க. அரசு கெஜ்ரிவாலை மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு. அதிகாரத்தில் இருக்கும் ஒரு முதல்வரைக் கைது செய்வது இதுதான் முதல்முறை. அமலாக்கத்துறையைத் தன் கட்சியின் ஒரு பிரிவாகவே கருதுகிறது பா.ஜ.க. எங்கெல்லாம் தங்களால் மக்கள் அங்கீகாரத்தின் மூலம் ஆட்சிக்கு வரமுடியவில்லையோ அங்கெல்லாம் அரசு அமைப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது இதுவரை தொடர்கதையாகவே இருக்கிறது.
Add Comment