பாலிவுட்டின் ஹீ மேன், தரம் பாஜி என்று பல செல்லப்பெயர்கள் கொண்ட பிரபல நடிகர் தர்மேந்திரா (89) நவம்பர் 24ஆம் தேதியன்று காலை காலமானார்.
தர்மேந்திரா கேவல் க்ரிஷன் தியோல் என்ற இயற்பெயர்கொண்ட இவர், 08.12.1935 அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானவில் உள்ள நஸ்ராலி என்ற ஊரில் பிறந்தார். 1960இல் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த அறுபது ஆண்டுகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஓர் ஆண்டில் எட்டுப் படங்கள். அனைத்தும் வெற்றி. இன்னொரு ஆண்டில் ஒன்பது வெற்றிப்படங்கள். பாலிவுட்டில் அந்தக் காலத்தில் இது ஒரு சாதனை. ஆக்க்ஷன் ஹீரோவாவும் காதல் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இரண்டையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடினார்கள்.
சண்டையோ காதலோ இரண்டும் அவர் முகத்துக்குப் பொருந்தி வந்தன. பற்களைக் கடித்தவாறு வில்லனைப் பார்த்து அவர் பேசும் வசனங்களை மக்கள் விசிலடித்துக் கைதட்டி ரசித்தனர். அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, வினோத் கன்னா என நடிகர்களின் ஆட்சியில் பாலிவுட் இருந்தபோது உள்ளே நுழைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவருக்கென்று கதை எழுதி இயக்கிய இயக்குநர்களும் உருவானார்கள்.















Add Comment