அருங்காட்சியகத்தில் பிரார்த்தனை
அவள் ஆய்வுப்பட்டறை ஒன்றிற்காக டெல்ஃப்ட் சிறுநகருக்குச் சென்றிருந்தாள். பட்டறை முடிந்ததும் நகரைச் சுற்றினாள். மாணவியானதால் யூரோக்களைக் கணக்கிட்டுச் செலவிட்டாள். நுழைவுக் கட்டணமில்லா இடங்களுக்குச் செல்ல எண்ணினாள்.
ஓடே கேர்க் எனும் தொன்மையான தேவாலயத்திற்குச் சென்றாள். வாயிலில் நுழைவுச்சீட்டு வழங்கிடம் இருந்தது.
‘ஏழு யூரோக்கள்’
‘வழிபட வந்திருக்கிறேன்’
‘பிரார்த்தனை செய்யலாம். இது பார்வையாளர் நேரம். எனவே நுழைவுக்கட்டணம் இருக்கிறது’
‘பிரார்த்தனை செய்ய கட்டணமா?’
அலுவலர் அமைதியாக அவளை நோக்கினார். குழப்பத்துடன் சீட்டை வாங்கினாள்.















Add Comment