உங்கள் ஃபோனில் எத்தனை செயலிகள் இருக்கின்றன? அடுத்த வரியைப் படிப்பதற்கு முன்னர் விடையை மனத்துக்குள் ஒருமுறை சொல்லவும்.
எனக்கு சரியாத் தெரியலியே என்போர் எண்ணிப் பார்த்துவிடுங்கள்.
உதாரணமாக உங்கள் ஃபோனில் நாற்பத்தெட்டு செயலிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் செயலிகள் எத்தனை?
இன்ஸ்டால் செய்த பின்னர் ஓப்பனே செய்யாத செயலிகள்கூட இருக்கலாம்.
சரி இருந்துவிட்டுப்போகட்டுமே. அப்படி விட முடியாது. ஒவ்வொரு செயலியும் ஒரு டைம் பாம். நோட்டிஃபிக்கேஷனில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். நம் கவனத்தைச் சிதறடிக்கும்.
இந்தச் சிக்கலை டிஜிட்டல் க்ளட்டர் என்கிறார்கள். டிஜிட்டல் குப்பைகள் என்று புரிந்துகொள்ளலாம்.















Add Comment