Home » டிட்வா பேரழிவு – இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்
உலகம்

டிட்வா பேரழிவு – இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்

2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

சந்தேகமில்லாமல் இது பேரிடர் தான். மலையகப் பகுதிகளில் மண்சரிவு. கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, பதுளை, பசறை, கம்பளை, கெலிஓயா, அலவத்துகொட, கொத்மலை, ஹசலக, ஹாலிஎல, கேகாலை – உடுவன்கந்த, வறக்காபொல பகுதிகளில் இன்னமும் மண்ணுக்குள் மீட்கப்படாது இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம். அனுராதபுரம், மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, நுவரெலியா பகுதிகள் பாரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கொழும்பை அண்மித்த பகுதிகள் எல்லாம் பார்க்குமிடமெங்கும் வெள்ள நீரினால் சூழ்ந்து காணப்பட்டன. சில இடங்களில் வைத்தியசாலைகளே நீரில் மூழ்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணுக்குள் புதையுண்டும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!