இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. கோடீஸ்வரராக இந்தத் துறையின் உள்ளே வருபவர்கள் லட்சாதிபதிகளாகத்தான் வெளியே செல்வார்கள். அதிக முதலீட்டின் தேவை, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள், அரசின் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், விமான நிலையக் கட்டணங்கள், புவிசார் அரசியல் நிகழ்வுகள், இயற்கைப் பேரிடர்கள், பெருந்தொற்று, மாறிவரும் எரிபொருள் விலை, சீரற்ற வருவாய், விலை குறைப்புப் போட்டி எனத் தொழில் ஜாம்பவான்களுக்குக்கூட நிதி ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் இது ஒரு சவாலான துறையாகவே இருந்துள்ளது.
2013ஆம் ஆண்டு எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்தது. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முழுவதுமாக மூடப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற மற்ற நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ஒரு பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், அதே சிக்கலான காலகட்டத்தில் இண்டிகோ (IndiGo) நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக உருவெடுத்தது. அந்த நிதியாண்டில் 787 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்தது.














Add Comment