Home » எப்பேர்ப்பட்ட ‘கிஃப்ட்’!
இந்தியா

எப்பேர்ப்பட்ட ‘கிஃப்ட்’!

குஜராத்-கிப்ட் சிடி

குஜராத்தின் காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள GIFT City (Gujarat International Finance Tec-City), இந்தியாவின் நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான முயற்சி. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம்.

இது மற்ற நாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட நகரம் இல்லை. அந்த நகரங்களுக்கு இணையாக இந்தியாவிலேயே ஒரு சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தை (International Financial Services Centre – IFSC) உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது.

இந்நகரத்தின் முதன்மை நோக்கம், உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம், இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் நிதிச் செயல்பாடுகளை (Offshore Financial Activities) இந்தியாவுக்குள் கொண்டு வருவதும், உள்ளூர் நிறுவனங்களுக்குச் சர்வதேச மூலதன அணுகலை வழங்குவதும் ஆகும். இங்கு வணிக வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகள், சில்லறை வணிக இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் அமைந்துள்ளன. உள்நாட்டு நிதிப் பகுதி, சர்வதேச நிதிச் சேவை மையம் என இரட்டைச் செயல்பாடுகள் இங்கு நடக்கின்றன. வெளிநாட்டு நாணயங்களில் நிதிச் சேவைகளை வழங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!