ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பதாயிரம் கிலோ ஐஸ் என்னும் போதைப் பொருளைத் தயாரிக்கும் ரசாயன மாதிரிகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்த போலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா?
இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களின் குட்டு ஒட்டுமொத்தமாய் அம்பலமாகி உள்ளதால், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ஐயாயிரம் கோடி இலங்கை ரூபாய் (ஆயிரத்து ஐந்நூறு கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு மேலதிகமாக, உத்தியோகப்பூர்வமற்ற முறையில் Deep State எனப்படும் பின்புல அரசு ஒன்றும் இயங்கியதாகவும், போதைப் பொருள் மாஃபியாக்களும், கூலிப்படைகளும், பெயர் போன கேங்ஸ்டர்களும் அரசின் அதிகார மையங்களுக்குள் ஊடுருவி அரசு அதிகாரிகள் சிலரை விலைக்கு வாங்கி இத்தனை நாளாய் ஒரு குற்ற சாம்ராஜ்யத்தை நிறுவி இருந்ததாகவும் கூறுகிறது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு.














Add Comment