Home » ஏஐக்கொரு தனி அமைச்சர்!
உலகம்

ஏஐக்கொரு தனி அமைச்சர்!

இன்று மனித ஆற்றலை நகல் எடுக்க ஏ.ஐ வந்துவிட்டது. நகலெடுப்பதை எல்லாம் கடந்து அதி புத்திசாலியாக உருமாறி வரும் ஏ.ஐ. சிலருக்குத் தலைவலியாகவே தெரிகிறது. காரணம்… அனைவரது வேலையையும் இது விழுங்கிவிடும் என்று பயம். இருப்பினும் இது எந்தெந்த விதத்திலெல்லாம் மனித குலத்திற்குப் பயன்படும் என்பதைக் குறித்தான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் பொது மக்களும் இன்று செயற்கை நுண்ணறிவைப் பல விஷயங்களில் அனாயசமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். நிரல் எழுதுவது தொடங்கி புத்தகங்களின் அட்டை வடிவமைப்பு, காணொளித் தயாரிப்பு, ஓவியம், கவிதை என்று எல்லாவற்றிலும் ஏ.ஐ.-ஐ சாமானியனும் சகஜமாக உபயோகிக்கும் நிலை வந்துவிட்டது.

இதெல்லாம் உலகறிந்ததுதான். ஆனால்,  துபாயில் செயற்கை நுண்ணறிவுக்கான மாநில அமைச்சராகவே ஒருவர் பதவி ஏற்றிருப்பது தெரியுமா?

அவர், ஒமர் சுல்தான் அல் ஒலமா.

துபாய் யுனிவர்சல் புளூபிரிண்ட் (DUB.AI) என்ற மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. துபாய் செயற்கை நுண்ணறிவு மையம் (DCAI) மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தேசியத் திட்டம் இணைந்து இதை மியூசியம் ஆப் ஃப்யூச்சரில் (Museum of Future) நடத்தி முடித்தார்கள். இதற்குத் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் தலைமையேற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இம்மாதமே (11 ஆம் தேதி) ஒரு ஏ.ஐ. மாநாட்டை சிறப்பாக நடத்தியது துபாய்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!