ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும்.
நன்கு குளிப்பாட்டி, வெயிலில் தலைகாய வைத்து, வயிறார ஊட்டிவிட்டு, அப்படியே தோளில் போட்டு உலவிக்கொண்டே குழந்தைகளைத் தூங்க வைப்போமில்லையா? இதைத்தான் நீங்கள் அங்கு வளரும் யானைகளுக்குச் செய்ய வேண்டும். ஒரு சின்ன மாற்றம்- உங்களுக்கு பதில் யானை உங்களைத் தோளில் ஏற்றிக் கொண்டு உலவும்.
ஒன்றிரண்டு, மிஞ்சிப்போனால் நான்கைந்து யானைகளை ஓரிடத்தில் வளர்ப்பார்கள். கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரிக்கிறார்கள். இந்த யானையூரில் எறும்புகளைப் போல ஊர்ந்துசென்றால் கிட்டும் அனுபவங்கள் ஏராளம்.
Add Comment