Home » உடைக்கப்படுகிறதா ஈஃபில் டவர்?
உலகம்

உடைக்கப்படுகிறதா ஈஃபில் டவர்?

செப்டம்பர் 18ஆம் தேதி Tapioca Times என்கிற பகடி மின்னஞ்சல் தளத்தில் ஃபிரெஞ்சு தேசத்தின் ஈஃபில் டவர் 2026இல் இடிக்கப்படப்போகிறது என்ற தகவல் வெளியாகியது. இது எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது.

ஈஃபில் டவருக்கு இளைஞர்கள் யாரும் போவதில்லை, பராமரிப்பின்றி அணில்களும் (அங்கேயுமா?) புறாக்களும் எச்சமிட்டு சுத்தமும், அழகும் மகிமையும் இழந்து நிற்கிறது என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது. இதனை Société d’Exploitation de la Tour Eiffel (SETE) என்கிற ஈஃபில் டவரைப் பராமரிக்கும் நிறுவனம் கடுமையாக மறுக்கிறது. வருடத்துக்கு அறுபத்து மூன்று லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலம் என்று பெருமை பேசுகிறது.

ஈஃபில் டவர் இப்போது பார்வையாளர்களுக்கு மூடி இருப்பது என்னமோ உண்மைதான். ஃபிரான்ஸ் தேசத்தில் அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் அதிக வரிகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கிறது என்பதே உண்மையான காரணம் என்று ஈஃபில் டவரின் அறிவிப்புப் பலகை கூறுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!