கேரள மாநிலத்தைப் பாதியாக வெட்டியெடுத்தால் கூட எல் சால்வடோரை விடச் சற்று பெரியதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறிய நாடு உலகின் குற்றவாளிகளின் தலைநகரம் என்றும், உலகின் பயங்கரவாத நாடுகளில் ஒன்று என்றும் அழைக்கப்பட்டது. இன்று தங்கள் நாட்டை சுத்தமாக்கிவிட்டு, வெளிநாட்டுக் குற்றவாளிகளை வரவேற்கத் தயாராக உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மார்கோ ரூபியோவும், எல் சால்வடோர் ஆளுநர் நஹிப் புகேலேயும் கடந்த வாரம் சந்தித்தபோதுதான், குற்றவாளிகள் பற்றிய பேச்சு இடம்பெற்றது.
“நான் மெகா சிறைச்சாலை கட்டியுள்ளேன். இதில் நாற்பதாயிரம் கைதிகளுக்கு இடமுண்டு. பாதி காலியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றால், உங்கள் நாட்டை தொல்லைப்படுத்தும் குற்றவாளிகளை இங்கே அனுப்பலாம். நாங்கள் பார்த்துக்கொள்வோம். கொடுஞ்செயல் குற்றவாளிகள் அமெரிக்கராக இருந்தாலும், புலம்பெயர்ந்தவராக இருந்தாலும் எங்களிடம் அனுப்பலாம். தலைக்கு இவ்வளவு டாலர் எனக் கொடுத்தால் போதும்” எனச் சொல்லியிருக்கிறார் புகேலே.
Add Comment