Home » உன்னை நான் அறிவேன்! – நாட்டு மக்களுக்கு ஒரு நவீன குடைச்சல்
சமூகம்

உன்னை நான் அறிவேன்! – நாட்டு மக்களுக்கு ஒரு நவீன குடைச்சல்

அமெரிக்க குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம், நிரந்தரக் குடியுரிமை மற்றும் பணியாளர், மாணவர் கடவுச்சீட்டில் உள்ளோர் அனைவரும் தங்கள் சமூகவலைத்தள கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது.

மேற்பார்வையிடுவது ஒன்றும் புதிய கலாசாரம் இல்லை. காவலர்கள் கண்காணிக்காதபோது வேகத்தடையை மீறாத ஓட்டுநர்கள் இல்லை. ஆதி நாளில் வயலில் வேலைசெய்யும் போது வயலுக்குச் சொந்தக்காரர்கள் நாற்று நடும்போதோ கதிர் அறுக்கும் போதோ வந்து கவனிப்பது வழக்கம். அப்படியும் தெரிந்தவர்களுக்கு இரண்டு படி அள்ளிப்போடும் ஊழியர்கள் உண்டுதான். முதலாளிகளை ஏமாற்றாவிடில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி வராது. அதேபோல கண்காணிப்பின் சுகமே நிர்வாகிகளுக்குத் தனி. இது பொதுவிதி.

கண்காணிப்பு எங்கே தனிமனித சுதந்திர எல்லைகளை மீறுகிறது? ஆர்வ மிகுதியால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் அரசுக்கு எதிரானவையா? முன்பே பாலஸ்தீனிய இஸ்ரேல் விஷயத்தில் பலர் பணி இழந்ததைக் காண முடிந்தது.

இந்திய அரசு, காவலர்கள், மற்றும் உளவுத்துறைக்கு சமூக வலைத் தளங்களில் பகிரப்படும் தகவல்களை பயனரின் அனுமதி கேட்காமல் அவருக்கு எதிராகக் கூடப் பயன்படுத்தலாம் என சொல்கிறது. இதே போல சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த கருத்துக்களால் கைது நடவடிக்கை வரை சென்ற சில செய்திகளை காண முடிகிறது. இரண்டு பெரிய மக்களாட்சி நாடுகளில் இப்படி நிலைமை என்றால் ஐக்கிய அரபு நாடுகளின் நிலையை எண்ணிப்பார்க்கவே தேவையில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!