உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது ஆப்ரிக்காவிற்குள்ளும் அதற்கு அப்பாலும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.
எம்பாக்ஸ்
பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை போன்றவை ஒரே இனத்தைச் சேர்ந்த வைரஸ். அதன் குடும்பத் தலைவர் பெரியம்மை. காரணம் அந்தப் பெரியம்மை வைரஸிலிருந்து உடைந்து உருமாறித் தோன்றிய வைரஸ்கள்தான் பிற அம்மைகள். அதே பெரியம்மைக் குடும்பத்திலிருந்து தோன்றியதுதான் எம்பாக்ஸ். மங்கி பாக்ஸ் என்பதன் சுருக்கம்தான் எம்பாக்ஸ். தமிழில் குரங்கம்மை.
முதலில் இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. இப்போது மனிதர்களுக்கு இடையே பரவுகிறது. இது புதிய வைரஸ் அல்ல. 1958ஆம் ஆண்டு டென்மார்க்கில் ஒரு குரங்கை ஆராய்ந்த போது இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதை ஜூனோடிக் டிசீஸ் (Zoonotic Diseases) என்று சொல்வார்கள்.
Add Comment