Home » மேப்ப மாத்து!
உலகம்

மேப்ப மாத்து!

உலக வரைபடத்தை நம்மில் எத்தனை பேர் உற்றுக் கவனித்திருப்போம்? வரைபடத்தின் நடுவே அழகாய் அமைந்திருக்கும் ஆப்பிரிக்காவைக் கூர்ந்து கவனித்ததுண்டா? ஆசியாவுக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய கண்டம். ஆனால் வரைபடத்தில் வட அமெரிக்கக் கண்டத்தை விடச் சிறியதாய் வரையப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவுக்குள் பதினான்கு கிரீன்லாந்துகளை அடக்கிவிடலாம். ஆனால் வரைபடத்தில் கிரீன்லாந்து ஆப்பிரிக்காவுக்கு நிகராக, கிட்டத்தட்ட ஒரே நீள அகலத்தில் காட்சியளிக்கும். அதே வரைபடத்தில் ஐரோப்பிய நாடுகள், அவற்றின் உண்மையான பரப்பளவை விடவும் பெரிதாகத் தோற்றமளிக்கும்.

உலக வரைபடத்தில் ஒப்பீட்டளவில் தங்கள் கண்டம் சிறியதாய் இருப்பது ஆப்பிரிக்க மக்களுக்குப் பெரும் குறையாக உருவெடுத்துள்ளது. இந்தத் தவறான சித்திரிப்பைச் சரிசெய்யும் பொருட்டு ‘Correct the Map’ என்ற பரப்புரையைச் சில பொதுநல அமைப்புகள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் அங்கம் வகிக்கும் ஆப்பிரிக்க ஒன்றிய அமைப்பும் (African Union) இக்கருத்தை வலியுறுத்துகிறது.

ஆப்பிரிக்க நாடுகளின் உலக வரைபடத்தைத் திருத்தும் கோரிக்கைக்கான காரணங்கள் என்ன?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!