ரஜினி நடிப்பில், கமல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கும் படம். நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைகிறார்கள். மிகப்பெரிய வாய்ப்பு. அறிவிப்பு வந்த ஒரே வாரத்தில் அந்தப் படத்தை இயக்க முடியாது எனச் சுந்தர் சி விலகிக் கொள்கிறார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடிக்கவிருந்த படம் ‘தாதா சாகேப் பால்கே’. இது அந்த இருவரின் கனவுப் படமும் கூட. உருவாக்கம் குறித்த விவாதத்தில் ஒத்த கருத்தின்றி அந்தப் படத்தைத் தொடர வேண்டாம் என்று கைவிடுகின்றனர். ஹிரானி, ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்தும் ‘டங்க்கி’ படம் வெற்றி பெறவில்லை.
மம்மூட்டி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அமரம். முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் மறுபடி வெளியானது. முதல் காட்சிக்குப் பத்துப் பேர் கூட இல்லை. முதல் நாள் வசூல் எட்டாயிரம் ரூபாய். அடுத்த நாள் படம் தூக்கப்பட்டு விட்டது.
தெலுங்குப் படவுலகில் இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ தவிர பெரிய அளவில் வசூல் செய்த பெரிய படங்கள் இல்லை. ஓடியவை அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். ராம்சரண் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ மிகப்பெரிய தோல்வி.
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை தமிழில் 205 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் நஷ்டத்துக்கு ஆளாகாத படங்கள் என்றால் மதகஜராஜா, டிராகன், குட் பேட் அக்லி , டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, கூலி, சக்தித் திருமகன் உள்பட இருபது படங்களைச் சொல்லலாம்.













எல்லாம் சரி. ஆனா மாமனை நல்ல படம்னுட்டீங்களே.