Home » போலிகள் ஜாக்கிரதை!
சட்டம்

போலிகள் ஜாக்கிரதை!

‘என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நான் சேலத்தில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். எங்கள் பகுதிகளில் நிலம் விற்பனை தொடர்பான வழக்குகள் அதிகம் இருக்கும். அதில் வருமானமும் அதிகம் என்று எனக்குத் தெரியும். நிலம் வாங்கல், விற்றலில் ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கும். மோசடிகள் அதிகம் நடைபெறும். சட்டத்தின் ஓட்டைகளை வைத்து இதில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.’

‘என் பெயர் கவிதா. திருமங்கலம் எங்கள் ஊர். எங்களுடையது மிகவும் பிரச்சனைகள் நிறைந்த குடும்பம். சட்டச்சிக்கல்களை அதிகம் சந்தித்திருக்கிறேன். அதனால் நானே வழக்கறிஞராகிவிட்டால் நம் வழக்குகளை நாமே பார்த்துக் கொள்ளலாம், குடும்பத்திற்கும் வசதியாக இருக்கும் என்று வக்கீலாக முடிவு செய்தேன்.’

இதில் என்ன ஆச்சரியம், இவையெல்லாம் சாதாரணம்தானே? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு லட்சியம், இவர்களுக்கு இது என்று எண்ணலாம். இந்த இரண்டும், சமீபத்தில் போலி ஆவணங்கள் கொடுத்துத் தங்களை முழுநேர வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்து காவல்துறையிடம் பிடிபட்டவர்களின் சொந்த வாக்குமூலங்கள். அதிலும் இவர்கள் பட்டப்படிப்பு கூடத் தாண்டாத சாதாரணர்கள் என்பதுதான் திகைப்புக்குரிய செய்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!