Home » PayTM: என்னதான் சிக்கல்? எதனால் இந்தச் சரிவு?
இந்தியா

PayTM: என்னதான் சிக்கல்? எதனால் இந்தச் சரிவு?

ஒரு மாத காலமாக இந்தியர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பேடிஎம். இனிமேல் பேடிஎம் வேலை செய்யாதா? பேடிஎம் வாலட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப வங்கிக் கணக்குகே மாற்ற முடியுமா? பெரிய நிறுவனங்கள் முதல் சாலையோர வியாபாரிகள் வரை தங்களுடைய வியாபாரப் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ஸ்கேன் கோடு வைத்திருக்கிறார்கள்.

Unified payment interface (UPI) என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் யுபிஐ மூலம் நடக்கின்றன. வணிக மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாளைக்கு ரூபாய் முப்பத்தாறு கோடி அளவில் பணப் பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடைபெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. 2027-ஆம் ஆண்டு இது ரூபாய் நூறு கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூபிஐ சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் மீது வங்கி விதிமீறல்கள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இதன் செயல்பாடுகளுக்குத் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

நீங்கள் இந்தியாவில் வாழ்பவர் என்றால் பேடிஎம் பற்றித் தெரிந்திருக்கும் அல்லது உபயோகித்திருப்பீர்கள். பேடிஎம் என்ற சொல்லினுடைய விரிவாக்கம் PAY THROUGH MOBILE (PAYTM). இது இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் கட்டணம் மற்றும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களில் ஒன்று. நிதித் தொழில்நுட்ப ஜாம்பவானாக இருந்த இந்த நிறுவன வங்கிச் செயல்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த சேவைகள் புரியத் தடை விதித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!