நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்குமென தேசியக் கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்தோடு முடிவுகளை எதிர்பார்த்திருந்தனர்.
இந்தி பேசும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜகவும் காங்கிரசும் நேரடியாக மோதின. தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. வட கிழக்கு மாநிலமான மிசோரமில் பிராந்தியக் கூட்டணிக் கட்சிகளிடையே தான் போட்டியே. பாஜகவும் காங்கிரசும் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமே களம் கண்டனர்.
Add Comment