Home » நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!
இந்தியா

நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!

டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட் செய்திகள் வந்து, இப்போதுதான் மூச்சுவிட்டுக்கொள்ள சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக மழை குறைந்திருக்கிறது. இம்முறை வரலாறு காணாத மழை வெள்ளம் என்கிறார்கள். வட இந்தியா முழுதுமே தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்றாலும் டெல்லியின் பாடு இன்னும் மோசம். காரணம், நகரைச் சுற்றி ஓடுகிற யமுனை. அதன் வெள்ளப் பெருக்கு.

ஒரு காலத்தில் யமுனையும் புனித நதிகளுள் ஒன்றாகத்தான் இருந்தது. நவீன காலம்தான் அதனை நச்சு நதியாக்கியது. தொழிற்சாலைக் கழிவுகள், குப்பை சேர்மானம், ரசாயனக் கழிவு சேர்மானம் இன்னபிற. அவ்வப்போது யமுனையில் ஏற்படுகின்ற நச்சு நுரை பகுதி வாழ் மக்களிடையே பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருவதை அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம். பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். இன்று யமுனை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. நச்சு நுரையல்ல காரணம். கொட்டும் மழை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • யமுனை நதியின் வெள்ளப்பெருக்கு எங்களுக்கு ஓர் அருமையான கட்டுரையை தங்களிடம் இருந்து வழங்கியிருக்கிறது. இதுவும் ஓர் இயற்கையின் பேரதிசயம்தான்! சிறப்பான கட்டுரை! பாராட்டுகள்!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!