Home » G இன்றி அமையாது உலகு – 11
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 11

ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம்

இன்றுவரை கூகுளின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக எல்லோருமே சொல்வது அதன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் முறையைத்தான். இதற்கான விதை, நிறுவனத்தின் ஆரம்ப நாள்களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் என்ற மூன்று மந்திர வார்த்தைகள்தான் கூகுளை மற்ற நுட்ப நிறுவனங்களிடமிருந்து வேறுபடுத்திக்கொண்டே வந்திருக்கிறது.

தொடர் ஆராய்ச்சியின் வழி எதையெல்லாம் செய்தால் பயனர்கள் மகிழ்வார்கள் என்று கண்டறிதல்.  கண்டறிந்த வேகத்திலேயே பயன்பாட்டுச் செயலியில் உட்புகுத்துதல். அதன் வழியாகவே அதில் ஏதேனும் சாதக பாதகங்கள் இருக்கிறதா என்பதைப் பார்த்து மேம்படுத்துதல் என்கிற தாரக மந்திரத்தை ஆரம்ப நாள்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூகுள் செய்து கொண்டிருந்தது.

இன்று உலகம் போகும் போக்கிற்குத் தகுந்தாற்போல தினமும் செய்துகொண்டிருக்கிறது. அந்த நாளில் இந்தக் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை தேடல் சார்ந்தவை மட்டும்தான். ஆனால் அவை ஒவ்வொன்றிலும் புதுமையும், வேகமும், பயனும் நிறைந்ததைப் போலப் பார்த்துக் கொண்டது.

இதற்காகவே கூகுள் லேப்ஸ் (Google Labs) எனும் ஆராய்ச்சிப் பிரிவு 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். இதில் கூகுள் செய்த தனிப்பட்ட சிந்தனை என்பது, ஆராய்ச்சிக்கென தனிப் பிரிவு இருந்தாலும், நுட்பத்தில் வேலை செய்துகொண்டிருந்த யார் வேண்டுமானாலும் கூகுள் லேபிற்கு தங்கள் யோசனைகளைத் தெரிவிக்கலாம் என்பதுதான். அதாவது, ஆராய்ச்சிச் சாலையில் நிபுணர்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருப்பார்கள். யோசனைகள் வரவர அவற்றைத் தனியாகச் சேர்த்துவைத்துக் கொண்டு ஆராயப்படும். அதில் ஏதேனும் செய்தே ஆகவேண்டியதாகக் கருதப்பட்டால் உடனடியாக அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டி ஆராய்ச்சிச் சாலையில் பட்டியலிடப்படும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!