தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment