Home » ஜி20: படம் வரைந்து பாகம் குறித்தல்
இந்தியா

ஜி20: படம் வரைந்து பாகம் குறித்தல்

கோவிட் தொற்று தெரியும். பொருளாதாரத் தொற்று? தொண்ணூறுகளின் இறுதியில் ஆசியப் பொருளாதார நெருக்கடி நிலைமை நினைவிருக்கிறதா? வெளிநாட்டுக் கடனால் கிட்டத்தட்டத் திவாலாகும் நிலைக்குச் சென்றது தாய்லாந்து. சீரற்ற பொருளாதாரக் கொள்கைகளினால் தாய்லாந்தில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி நாளடைவில் முழு ஆசியாவையும் அசைத்துப் பார்த்தது.
பல கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் திணறிக் கொண்டிருந்தன. அவர்களால் ஒரு தனி நாடாக நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு மேம்படுத்தப்பட்ட சர்வதேசக் குழுவிற்கான தேவை அப்போதுதான் வந்தது.

இது ஜி7 நாடுகளை யோசிக்க வைத்தது. (பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகள்) அவர்கள் உலக அளவிலான பொருளாதாரப் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். 1999-ஆம் ஆண்டு ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஒன்றுகூடினர்.ஒரு புதிய குழுவின் தேவையை ஒப்புக்கொண்டனர். ஜி20 உருவானது. டிசம்பர் மாதம் பெர்லினில் ஜி20யின் தொடக்க விழா நடைபெற்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!