Home » கல்வி தரும் புத்த விகாரம்
சுற்றுலா

கல்வி தரும் புத்த விகாரம்

எந்த நாட்டின் தலைநகருக்குச் சென்றாலும் பொதுவாகக் காணக்கூடிய போக்குவரத்து நெரிசல்களும் அடுக்கு மாடிக் கட்டடங்களும் கொண்ட ஒரு தலைநகரமே கொழும்பு மாநகரமாகும். பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகரச் சூழலில் அதற்கு எதிர்மாறாக அமைதியான சூழலைக் கொண்ட ஒரு இடமுமுண்டு.

கொழும்பு மாநகரத்தின் முக்கியப் பாகத்தில் ஒரு சிறு ஏரி. அந்த ஏரிக்கு அருகாமையில் கங்காராமய கோயில் என அழைக்கப்படும் ஒரு புத்த விகாரையினைக் காணலாம். இந்தக் கோயிலின் ஒரு சிறுபகுதி ஏரியோடு அமைந்துள்ளது. ஆனாலும் முக்கியமான கங்காராமய கோயிலின் பிரதான வளாகம் இந்த ஏரிக்கு அருகாமையில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் வெளியே உள்ள நகரத்தின் பரபரப்புகள் ஏதுமில்லை. அமைதியான சூழலும் பலவிதமான கலைவடிவங்களின் வெளிப்பாட்டினையும் காணலாம்.

இந்தக் கோயில் கொழும்பு மாநகரின் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளதை எந்தவொரு சுற்றுலா பற்றிய இணையதளத்திலும் காணலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!