Home » காயத்ரி 2.0: காயத்ரி ஒய்
ஆண்டறிக்கை

காயத்ரி 2.0: காயத்ரி ஒய்

‘தீனி முக்கியம் பிகிலு’ இதுதான் சென்ற வருடம் நான் எழுதிய ஆண்டுக் குறிப்பின் தலைப்பு. அதாவது வயிற்றுக்குக் கொடுப்பது போல மண்டைக்கும் சத்தான தீனி போட வேண்டும். அப்போதுதான் தரமான எழுத்துகள் வெளிவரும் என்று ஆசிரியர் சொல்லியிருந்தார். அவர் மெச்சுமளவுக்குப் படித்து விட வேண்டும், முக்கியமான இலக்கியங்களை முக்கி முக்கி மூளைக்குள் ஏற்றிவிட வேண்டும் என்பதைத்தான் முதல் குறிக்கோளாக வைத்திருந்தேன்.

சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள், அசோகமித்திரன் குறுநாவல்கள், சிறுகதைகள், தி.ஜானகிராமனின் மரப்பசு, அம்மா வந்தாள் என செவ்வியல் ஆக்கங்களாகத் தேடி நூலகத்திலிருந்து பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

ஜேஜே சில குறிப்புகள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டு, விறுவிறுப்பாகச் சென்று எதிர்பாரா விதத்தில் முடியும் கதையல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை முழு கவனத்தையும் குவித்துப் படிக்க வேண்டியது. அப்படிப் படித்தால் கூட முதல் வாசிப்பில், சுரா பொதித்து வைத்திருக்கும் பகடியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அசோகமித்திரன் சுரா அளவுக்கு மோசமில்லை. வேகமாகப் படித்தாலும் கதை ஓடிவிடும். ஆனால் அவரும் ஆங்காங்கே அமுக்கமாகக் கன்னி வெடிகளைப் புதைத்து வைத்திருப்பார். தாவித் தாவி வந்து விட்டோமேயானால் அவரெழுத்துக்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றிவிடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!