Home » Gen Z: ஒரு தலைமுறையின் கதை – 5
Gen Z தொடர்கள்

Gen Z: ஒரு தலைமுறையின் கதை – 5

ஆர்கானிக் அழகு

ஒரு காதில் ரப்பர் பேண்ட் மாட்டிக் கொண்டு, தாடையைக் கீழிருந்து மேலாக மஸாஜ் செய்து கொண்டிருந்தாள் சந்தியா. அருகில் எக்ஸ்ஃபோலியேட்டர், ஷீட் மாஸ்க், ரோஸ் குவார்ட்ஸ் கல் என விதவிதமான அழகுச்சாதனப் பொருள்கள்.

இரண்டாம் சாமம் பாத்ரூம் போவதற்கு எழுந்த கல்யாணி, பேத்தியின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து உள்ளே போனார்.

‘என்ன பாப்பா… பன்னெண்டு மணிக்குப் பிசாசு மாதிரி கண்ணாடி முன்னாடி உக்கார்ந்திருக்க? காதுல என்னவோ சுருங்கினாப்புல இருக்கே… ஏதாவது அடிகிடி பட்டுடுச்சா…’ கவலையுடன் தொடப் போன பார்வதியின் கையைப் பிடித்துக் கொண்டாள் சந்தியா.

‘இது கொரியன் பியூட்டி ஹேக் பாட்டி. இப்டி காதுல ரப்பர்பேன்ட் மாட்டி, கீழிருந்து மேலாக்க மஸாஜ் பண்ணி விட்டா, கன்னம் லிஃப்ட்டாகும். முகம் யூத்ஃபுல்லா இருக்கும்.

‘ஓஹோ… நேரத்துக்குத் தூங்கினாலே முகம் தெளிவா இருக்காதா… இப்படி ரப்பர் பேண்ட்டை மாட்டிக்கிட்டிருக்கியே… வலிக்கல?’
அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போலத் தோளை உயர்த்தி, கண்சிமிட்டினாள் சந்தியா. அடுத்ததாக, கண்ணாடி போலிருந்த திரவத்தை விரல்களின் நுனியில் ஊற்றிக் கொண்டு கன்னத்தில் ஒற்றி ஒற்றி எடுத்தாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!