ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z தலைமுறை இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பலரின் கவனம் ஈர்த்துள்ளன. அடுத்தடுத்த நாடுகளுக்கு இந்தப் போராட்டம் பரவிக் கொண்டே இருக்கிறது.
நேர்மையான காரணங்கள். தேவையான கோரிக்கைகள். கட்டுக்கோப்பான போராட்ட முறைகள். இப்படிப் போராடுவதற்கென்றே ஒரு டெம்ப்ளேட் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் Gen Z இளைஞர்கள். தங்கள் சக்தி என்ன என்று காட்டுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து விடுமா? இல்லைதான். ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையாவது முன்னேற்றம் அடைய வாய்ப்புண்டு. அப்படி என்ன விசித்திரமான போராட்டம்? எதற்கு? எங்கே? தெரிந்து கொள்வோம்.
கென்யப் போராட்டம் #RutoMustGo
கென்யாவில் ஜூன் மாதம் ஆரம்பித்த Gen-Z இளைஞர்களின் போராட்டம் உலக அளவில் பரபரப்பையும், விழிப்புணர்வையும் உருவாக்கி விட்டது. கென்யாவின் அதிபர் ரூட்டோ கடந்த இரண்டு மாதங்களாக, மக்களின் போராட்டத்தைக் கண்டு பல நடவடிக்கைகள் எடுத்தார்.
Add Comment