கவலைப் பேச்சு எங்கள் மூச்சு
ஒரு கல்லூரி கேண்டீனில்…
மாயா: ‘காலேஜ் முடியப்போகுது, நல்ல கிரேட் வாங்கனும், பெஸ்ட் புராஜெக்ட் கிடைக்கனும்.’ அப்படீன்னு எங்கம்மா அப்பா டெய்லி சொல்லிக் காமிக்கறாங்க. ஒரே ஆங்க்ஸைடியா இருக்கு. சம்டைம்ஸ் மூச்சுவிடவே கஷ்டமாருக்கு.
ஜமால்: ஐ கெட் தட். இன்ஸ்டால எனக்கு வேண்டிய எல்லாமே இருக்கற மாதிரி இருக்கு. ஆனா உள்ள… தாறுமாறா குழப்பம். அங்க பார்க்கறவங்களோட என்னை கம்பேர் பண்ணிக்கறேன். பர்ஃபெக்ட்டான உடம்பு, பியூட்டிஃபுல் வெகேஷன், வேற லெவல் வாழ்க்கை… இந்தப் பக்கம் நான், நைட்டு ரெண்டு மணிக்கு பெட்ல உக்கார்ந்து டூம் ஸ்க்ரோலிங் பண்ணிக்கிட்டு… வொர்ஸ்ட்.
பிளஸி: ப்ரோ… நீங்கல்லாம் ஏதேதோ ஃபீல் பண்ணிச் சொல்றீங்க. எனக்கு ஒன்னுமே இல்லாம எம்ட்டியா இருக்கு. பெட்ல சும்மா ஒக்காந்து விட்டத்தைப் பார்த்துகிட்டிருப்பேன். எங்கம்மா அதுக்கு சோம்பேறித்தனம்னு பேரு வச்சிருக்காங்க.
நிரஞ்சனா: நான் அப்டியே ஆப்போஸிட். என் மைண்ட்டுக்குள்ள ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கும். எக்ஸாம்ல ஃபெயில் ஆகிடுவேனோ? அப்படி ஆனா பிரண்ட்ஸெல்லாம் என்னை விட்டுப் போயிடுவாங்களா? இப்படியெல்லாம் யோசிப்பேன். ஏதாவது ஃபங்க்ஷனுக்குப் போகனும்னாகூட நம்மளால நல்லா நடந்துக்க முடியுமான்னு ஒரே பதற்றமா ஆகிடுது.
வைபவ்: இந்த ஃபீலிங்ஸ் எல்லாமே ரொம்ப காமன்தான். முன்னாடி யாரும் இதை பெருசா டிஸ்கஸ் பண்ணதில்ல. நான் ஒரு தெரபி செஷன் போயிகிட்டிருக்கேன். மாயா, ஆங்ஸைட்டியா இருக்கறப்ப மூச்சுவிடவே கஷ்டமாயிருக்குன்னு சொன்னல்ல… அதுக்கு ஒரு சின்ன டெக்னிக் இருக்கு.















Add Comment