‘உ லாபம்’
வீட்டிலேயே கம்ப்யூட்டர் செய்ய முடியுமா? பொருளற்ற வினா என்றுதானே தோன்றுகிறது? அவ்வாறல்ல. ஆப்பிள் கம்ப்யூட்டரின் முதல் மாடலை வீட்டில்தான் செய்தார்கள். ஜாப்ஸின் வீட்டில்.
பால் ஜாப்ஸுக்குத் தன் மகனுடன் இருப்பதில் மகிழ்ச்சி. ஆப்பிள் கம்ப்யூட்டரைச் செய்யத் தொடங்கிய பின் வீடே களைகட்டியது. கார்களை ரிப்பேர் செய்வதற்கென அவர் வைத்திருந்த கராஜை மொத்தமாக ஆப்பிள் குழுவிடமே கொடுத்துவிட்டார்.
இவர்கள் செய்யும் கம்ப்யூட்டரை யார் வாங்கவிருக்கின்றனர்? அங்குதான் ஜாப்ஸின் கைவண்ணம் இருக்கிறது.
வாஸ் செய்த கம்ப்யூட்டரை ஹோம்ப்ரூ கம்ப்யூட்டர் குழுவிடம் காண்பித்தனர். சின்னஞ்சிறு மைக்ரோபிராசஸர். எட்டு கிலோ பைட் மட்டுமே மெமரி. தனது கம்ப்யூட்டருக்கென வாஸ் எழுதியிருந்த பேசிக் (BASIC) மொழியின் ஒரு வெர்ஷன். இவ்வளவுதான். அடக்கமான கம்ப்யூட்டர்.
அப்போதிருந்த கம்ப்யூட்டர்களில் இன்புட் கொடுப்பது கூட எளிதானதல்ல. வண்ண வண்ண விளக்குகள், விதவிதமான ஸ்விட்சுகள் என பழைய படங்களில் வரும் வில்லன்களின் கூடாரம் போல இருக்கும்.















Add Comment