காதல் குண்டு
‘எப்பவோ ஒருதடவை வீகன் ரெஸ்ட்டாரன்ட் போகணும்னு சொன்னேன். அதை ஞாபகம் வச்சுகிட்டு சர்ப்ரைஸா நேத்திக்கு கதீட்ரல் ரோட்டுல புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனான். திஸ் கை இஸ் அன்ரியல்.’
தற்செயலாக மாலில் அறிமுகமாகி, நெருக்கமான பிரதீப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் திவ்யா.
‘பார்த்துடி… எனக்கென்னவோ அவன் லவ் பாம்பிங் பண்ற மாதிரி தெரியுது.’ நாலைந்து டேட்டிற்குச் சென்ற அனுபவத்தில் சொன்னாள் நிரஞ்சனா.
‘எல்லாரும் அப்படி கிடையாதுடி…’
பிரதீப்பின் மீது திவ்யாவுக்கு நல்ல வைப் இருந்தது. கடற்கரை, ரூஃப்டாப் ரெஸ்ட்டாரென்ட், மால் என மேலும் சில இடங்களுக்குச் சேர்ந்து சுற்றிய பிறகு பிரதீப்பை சாஃப்ட் லாஞ்ச் செய்ய முடிவெடுத்தாள்.
முதலில் இரண்டு காபி கப்கள், அடுத்து கோர்த்ததுபோல் இரண்டு கைகள், இறுதியாக பிரதீப்பின் தோள் மட்டும் தெரிவதுபோல ஒரு படம். ‘POV: சண்டே வைப்ஸ்’ என்று அதை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்தாள்.















Add Comment