கொடுத்த காசுக்குக் கூவுதல்
‘பன்னெண்டு எல் தரான், அசால்ட்டா வேலையை விடறேங்குது. எனக்கெல்லாம் அந்த சம்பளம் வர்றதுக்கு இருபது வருஷம் ஆச்சு. பிடிச்சா ஒரே பிடிவாதமா நிக்கறா…’ ஜனனியைப் பற்றிக் கவலையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் உஷா மேடம்.
ஜனனி, அவருடைய அக்கா பெண். படிப்பில் சூட்டிகை. பன்னிரண்டாவது படிக்கும்போதே தனித் தேர்வுகள் எழுதி, நேர்முகத் தேர்வில் பங்கெடுத்து ஒரு பெரு நிறுவனத்தின் ஸ்காலர்ஷிப் வென்றாள். என்ஜினீரிங் படிப்புக்கான கட்டணம் முழுவதையும் அந்த நிறுவனமே ஏற்றுக் கொண்டது, ஹாஸ்டல் செலவு உட்பட.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமென்று ஒப்பந்தம். வருடத்துக்குப் பன்னிரண்டு லட்சம் சம்பளம். காலை, மதிய உணவை கம்பெனி கேண்டீனிலேயே இலவசமாக முடித்துக் கொள்ளலாம். அழைத்துச் செல்வதற்கும் கொண்டு விடுவதற்கும் கம்பெனி பேருந்துகள் வரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்.
‘அவ வாழ்க்கையே செட்டிலாகிடுச்சு’ என அவள் பெற்றோரும், உற்றாரும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஜென் ஸீ ஜனனிக்கு வேலை பிடிக்கவில்லை.















Add Comment