Home » நீலமலை ரகசியம் -15
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் -15

திம்மட்டி

திம்மட்டி, மலை மேல் அமைந்த ஒரு கிண்ணம் போன்ற சமவெளியாக இருந்தது. பெரிய புல்வெளியும், ஆங்காங்கே நீரோடைகளும், எப்போதும் கனிவாக வீசிக்கொண்டிருக்கும் குளிர்காற்றும் சல்லிவனை வசீகரித்துக்கொண்டே இருந்தன. மலைப்பயணத்தால் நிறம் குறைந்திருந்த அவர் சரீரம் இப்போது மெள்ள ஆரஞ்சு நிறத்துக்கு மாறி, பின்னர் ரோஜா நிறத்திற்குப் போனபோது அதிசயப்பட்டார். தினம் தினம் கண்ணாடி முன் நின்று தன் முகத் தேஜஸைக் கண்டு அதிசயித்தார். தோலை மட்டுமல்ல, மனத்தையும் எத்தனை இதமாக வைத்திருக்கிறது. இந்த சீதோஷ்ணம் என்று ஒவ்வொரு நொடியும் அங்கு இருப்பதன் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார்.

மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவருக்குத் துக்கமும் இருந்தது. இந்த ஆறு நாள் மலையேற்றத்தில் ஆங்கிலேய வேட்டைக்காரர்களும், சிப்பாய்களும், கைதிகளுமாக மொத்தம் இருபத்தேழு பேர் இறந்துபோயிருந்தார்கள். மலையில் இடறி விழுந்தவர்கள் போக, இங்கு வந்து சேர்ந்த பிறகும் சிலர் எதிர்பாராத காரணங்களினால் மரணமடைந்திருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!