Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 20
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 20

பணமில்லாத பர்ஸ்

ஷேர் ஆட்டோக்களில் ஆரம்ப டிக்கெட் விலை இப்போது பத்து ரூபாய். பாரிஸ் கார்னர் அலுவலகத்துக்கு மாற்றலாகியபின் தினமும் ஷேர் ஆட்டோவில்தான் பயணம்.

‘அவர்களிடம் மீதிப் பணத்தைக் கேட்டு ஆட்டோவை நிறுத்தி வைத்துச் சண்டை போட்டுக்கொண்டிருக்க முடியாது. எப்போதும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொள்.’ இதுதான் சீனியர் ஊழியர்கள் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை.  சில்லறை இல்லாமல் சென்ற ஒருநாள், தனி ஆட்டோ பிடித்து அறுபது ரூபாய் அழுத அனுபவமும் உண்டு. சில ஆட்டோக்களில் டிரைவர் சீட்டுக்கு மேலே ‘நோ ஜி பே, நோ ஃபோன் பே’ என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டிருப்பார்கள். ஆட்டோ என்றால்கூடப் பரவாயில்லை, ஷேர் ஆட்டோவுக்குப் போய் யாராவது ஜி பே செய்வார்களா? என்று தோன்றியிருக்கிறது.

ஒருநாள் காலை ‘எங்கிட்ட காசே கிடையாது, எல்லாம் இந்த ஃபோனுக்குள்ளதான் இருக்கு. எதுனா சாப்பிடறதுன்னா சொல்லுங்க, பக்கத்துல ஏதாவது கடைல வாங்கித் தரேன்.’ பிச்சை கேட்ட பாட்டியிடம் மொபைலைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு ஜென் ஸீ பெண். அந்தப் பாட்டி முறைத்துப் பார்த்து நகர்ந்துவிட்டார். என்னோடுதான் அவளும் ஷேர் ஆட்டோவில் ஏறினாள்.  ஆட்டோ கிளம்பிய சில விநாடிகளில் ‘அண்ணா ஜி பே நம்பர் சொல்லுங்க…’ என்றாள். அடுத்த பத்து நொடிகளில் ஒரு டிங் சத்தம் கேட்டது. ‘அண்ணா… பணம் அனுப்பிட்டேன் பார்த்துக்கங்க.’ மொபைலைத் திருப்பிக் காட்டிவிட்டு இறங்கி விட்டாள்.

என்னிடமும் ஜி பே, பேடிஎம் எல்லாம் இருக்கிறது. ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவில், 5ஜி வேகத்தில் பத்து ரூபாய்க்கு ஜி பே செய்யும் காட்சியை அதற்குமுன் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!