தொழில்நுட்ப ஆசிரியர்கள்
பதினைந்தாயிரம் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தார் தயாளன் சார்.
‘என்ன சார் மாசக்கடைசில லம்ப்பா பணம் வந்துருக்கு?’
‘இது வராதுன்னே தண்ணி தெளிச்சு விட்ட பணம் மா, என் பொண்ணு வரவழைச்சுட்டா.’ என்றார். ‘அடடே அப்படியா?’ என்று கேட்க, உற்சாகமாக அந்தக் கதையைச் சொன்னார்.
பிளஸ் டூ முடித்தவுடன், நுழைவுத்தேர்வுப் பயிற்சிக்காக நொய்டாவுக்குச் செல்ல விரும்பியிருக்கிறாள் மகள். அவளை நொய்டாவுக்கு அழைத்துச் சென்று, பயிற்சி நிறுவனத்தில் சேர்த்துவிட்டு அருகிலிருந்த PGஇல் தங்குவதற்கு இடம்பார்த்திருக்கிறார்.
அங்கே ஒரு மாதம் தங்குவதற்கான தொகை பதினைந்தாயிரம். டெபாசிட். இன்னொரு பதினைந்தாயிரம். ஆக மொத்தம் முப்பதாயிரம் ரூபாயை ஆரம்பத்திலேயே கட்டிவிட வேண்டும். இடத்தைக் காலி செய்யும்போது டெபாசிட் தொகையைத் திரும்பத் தருவார்கள்.
காலி செய்யும்போது, ‘ஒரு வாரத்தில் உங்கள் அக்கவுண்ட்டுக்கு வந்துவிடும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். ஒரு வாரம் கழித்துக் கேட்டபோது மேனேஜரிடம் அப்ரூவலுக்குப் போயிருக்கிறது, இன்னும் நாலைந்து நாள்களில் வந்துவிடும் என்றிருக்கின்றனர்.














Add Comment