டிசம்பர் மாதம் என்றாலே ஜெர்மனியின் தெருக்கள் முழுவதும் மின்னும் விளக்குகள், பண்டிகை அலங்காரங்கள், மக்களின் மகிழ்ச்சிச் சிரிப்பு, மகிழ்ச்சியான இசை ஆகியவற்றை அணிந்து கொள்ளும். கூடவே, நட்சத்திரப் பூ, ஆரஞ்சுப் பழத் தோல்களால் வாசனையூட்டப்பட்ட ஒயின், ஜிஞ்சர்பிரெட் ஆகியவற்றின் கலவையான ஒரு வாசனை எங்கும் கமழ்ந்திருக்கும். இந்த அற்புதமான சுற்றுச்சூழல் சொல்லாமல் சொல்வது ஒரு விஷயத்தை- உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் கிறிஸ்துமஸ் சந்தைகள் மும்முரமாக இயங்கத் தொடங்கியிருக்கின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், சந்தைகளும் எந்த நாட்டுக்கும் புதிய விஷயமல்ல என்றாலும் ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தை குறிப்பிடத்தக்கதாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு சந்தைகள் 600 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன என்கிற பாரம்பரியத்தை உடையவை. இது 14ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஜெர்மனியின் மிகப் பழமையான கிறிஸ்துமஸ் சந்தை என்று சொல்லப்படும் டிரெஸ்டன் ஸ்ட்ரைசல்மார்க்ட் 1434 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இடைக்காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தைகள், “வெய்னாக்ச்மார்க்ட் (Weihnachtsmarkt)” என்று அழைக்கப்படுகின்றன.
Add Comment